ஏற்றங்கீகரிப்புக்கள்- ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்திக் காட்டிகளின் அடிப்படையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணைகள், 2017-2020
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்திக் காட்டிகளின் அடிப்படையில் அட்டவணைப்படுத்துகின்ற செயற்பாடானது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் சட்ட ஆய்வுப் பிரிவினால் இரு வேறு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. முதற் கட்டம் 2017-2019 காலப்பகுதியின் போது வழங்கப்பட்ட தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணைகள் தொடர்பிலும், இரண்டாவது கட்டம் 2020-2021 காலப்பகுதியின் போது வழங்கப்பட்ட தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணைகள் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டது. பகிரங்க அக்கறையினைத் தழுவி ஆணைகள் தெரிவு செய்யப்பட்டன என்பதுடன், இது இக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆணைகளின் குறிப்பிட்ட வீதத்தினை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது.
இப்பணியானது, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்ரோ ஜயவர்தனவின் மேற்பார்வையின்கீழ், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் சட்டத்தரணிகள் மற்றும் ஆய்வாளர்களாகிய இன்ஷிரா பாலிக், நிவேதா ஜெயசீலன், கிரிஜா சிவகுமார், பஸ்னா மிஸ்கின், ஹன்சினி விஜேசிங்க, ஆலோகா பல்லேகம, டிலேந்திரி டயஸ் மற்றும் நஸ்ரின் ஜான் ஆகியோர் உள்ளடங்கிய ஆய்வுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
ஆணைகளின் அட்டவணைப்படுத்தலின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இம்முயற்சிக்கு எமக்கு ஆதரவு வழங்கியமைக்காக கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.








rti.commission16@gmail.com
011 2691625/ 011 2678980
011 2691625