2017 பெப்ரவரி 10 – கொழும்பு – 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமை சட்டத்தின் பயனுறுதியான செயற்பாடு தொடர்பாக பொதுமக்களின் ஆதரவும் அக்கறையும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கு மிகுந்த ஊக்குவிப்பினை அளிக்கின்றது. இந்தச் சட்டம் 2017 பெப்ரவரி 03ஆம் திகதி பகிரங்க அதிகாரசபைகள்தொடர்பாக செயற்படுத்தப்பட்டது. 2017 ஜனவரி 29ஆம் திகதியும் பெப்ரவரி 02ஆம் திகதியும் செய்திப்பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் ஆணைக்குழுவின் பகிரங்க அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. ஆணைக்குழு சட்டத்தினால் தாபிக்கப்பட்ட மத்திய மேற்பார்வை, கொள்கை வகுத்தல் மற்றும் அமுலாக்கல் அமைப்பாகவும் அவ்வாறே மேன்முறையீட்டு விசாரணையாளராகவும் திகழ்கின்றது. நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும்; தகவலுக்கான உரிமையைப் பயன்படுத்துவோரும் சட்டத்திற்கு அமைவாக இணங்கி ஒழுகுவதை உறுதிப்படுத்துவதும் மேன்முறையீடுகளை விசாரிப்பதும், வழிகாட்டும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட நியதிச்சட்ட சுயாதீன குழுமம் ஒன்றாக இது செயற்படுகின்றது.
Media Statement (10-02-2017) Download