பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 


சிரேஷ்ட அரச பணியாளரான பியதிஸ்ஸ ரணசிங்க தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் பிரதம செயலாளரான திரு. பியதிஸ்ஸ ரணசிங்க தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஊடக விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் தகவலறியும் உரிமைக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் அமுலாக்கத்தை வினைதிறனாக்கும் பொருட்டு நாடளாவிய ரீதியில் தகவல் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளை வழங்கியதுடன் தகவலறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை தயாரிப்பதில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 1973ஆம் ஆண்டு இலங்கை நிர்வாகசேவையில் நுழைந்த திரு. ரணசிங்க அவர்கள் தேசிய மற்றும் மாகாண ரீதியில் பல்வேறு அமைச்சுக்களில் பணியாற்றியுள்ளார். இளைஞர் விவகார அமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு, சப்ரகமுவ மாகாண பொதுசேவைகள் ஆணைக்குழு, சப்ரகமுவ மாகாண கல்விஅமைச்சு, கைத்தொழில் அமைச்சு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக சபையின் நீண்டகால உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகின்றார்.

மேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்

 

rti independance new

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி விசாரணைகள்