பதிவு முகாமைத்துவம் தொடர்பான ஆலோசனை மற்றும் பிரிவு 7 தொடர்பான ஆணைக்குழுவின் வழிகாட்டல்
ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி 2017 அன்று தகவலறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 7இல் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு முகாமைத்துவம் தொடர்பிலான வழிகாட்டியினை தயாரிக்கும் பொருட்டான ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மற்றும் ஆய்வாளர்கள், தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள பிரதிநிதிகள், பொது நிர்வாக அமைச்சின் ஸ்தாபன பிரிவின் பிரதிநிதிகள், ஓய்வூதிய திணைக்களம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, ஊடகத்துறை அமைச்சு, பதிவாளர் நாயக திணைக்களம் மற்றும் நீதி சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தகவலறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு முகாமைத்துவம் தொடர்பிலான வழிகாட்டியை தயார் செய்ய தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் உதவியுடன் பங்குபற்றிய அனைத்து பங்குதாரர் நிறுவனங்களையும் உள்ளடக்கிய துணைக்குழுவொன்ற அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
30/06/2017 அன்று இடம்பெற்ற சிரேஷ்ட அரச அலுவலகர்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளுக்கும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு
அடுத்துவருவது- 2016 தகவலறியும் உரிமைக்கான சட்டம் இல.12இன் பிரிவு 8 மற்றும் 9 தொடர்பிலான சுய விருப்புடனான வெளிப்படுத்துகை மற்றும் பிரிவு 10 தொடர்பிலான பகிரங்க அதிகார சபைகளுக்கான அறிக்கை மாதிரிகள் தொடர்பான கலந்துரையாடல் (திகதி- உறுதிசெய்யப்படவில்லை).