பயனாளர் மதிப்பீடு: 4 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
  • தகவலறியும் உரிமைக்கான சட்டம் பிரிவு 21(1) உபபிரிவு 6இன் படி தகவல் கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் பகிரங்க அதிகார சபைக்கு சமர்ப்பிக்கமுடியும்.
  • எனினும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளும் மேன்முறையீட்டை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கமுடியாது.
  • 03.02.2017அன்று வெளியிடப்பட்ட அரசவர்த்தமானி (2004/66) இல் விதி 13(2) இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் மற்றும் மேன்முறையீட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி மேன்முறையீடு பதிவு தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ (அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ) மேற்கொள்ளப்படலாம்.
  • மோசடிகள் மற்றும் திரிவுபடுத்தல் ஆகியவற்றை இரண்டாம் கட்ட மேன்முறையீட்டின் தவிர்க்கும் பொருட்டே மின்னஞ்சல் மூலமான மேன்முறையீடுகளை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளுவதில்லை.
  • பகிரங்க அதிகாரசபையில் குறித்தளிக்கப்பட்ட அலுவலகர் ஒருவர் இருப்பாரேயானால் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டின் பின்னரேஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யமுடியும்.
  • குறித்தளிக்கப்பட்ட அலுவலகர் இல்லையானால் பாராளுமன்ற சீர்திருத்தம் மற்றும் ஊடக அமைச்சினால் 10.10.2016 வெளியிடப்பட்ட RTI/01/2016 சுற்றுநிரூபத்தின் படி குறித்த திணைக்களத்தின் தலைவர் குறித்தளிக்கப்பட்ட அலுவலகராக கருதப்படுவார்
  • குறித்தளிக்கப்பட்ட அலுவலகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டிற்கு மூன்று வார காலங்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் அதன் பின்னர் ஆணைக்குழுவிடம் மேன்முறையீட்டை செய்யமுடியும்.
  • பகிரங்க அதிகார சபைகளில் தகவல் அலுவலகர் அல்லது குறித்தளிக்கப்பட்ட அலுவலகர் நியமிக்கப்படாவிட்டால் குறித்த அதிகார சபையின் தலைவரிடம் மேன்முறையீடு செய்யமுடியும் (சட்டத்தின் படி அவரே தகவல் அலுவலகராக கருதப்படுவார்). அதன் பின்னர் நேரடியாக ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்ய முடியும்.
  • ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டை மேற்கொள்ளும் போது தகவலறியும் உரிமை சட்டம் பிரிவு 3(1) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆரம்ப தகவல் கோரிக்கை மற்றும் உரிய உசாத்துணை ஆவணங்கள், மேன்முறையீட்டாளரின் குடியுரிமை விபரங்கள் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலகரிடம் மேற்கொண்ட மேன்முறையீட்டின் பிரதி ஆகியன சமர்ப்பிக்கப்படவேண்டும்.

மேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்

 

uafi rti

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி விசாரணைகள்