பயனாளர் மதிப்பீடு: 4 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

திரு. ஹர்ச பெர்னாண்டோ (சிரேஷ்ட சட்ட ஆலோசகர்)

ஹர்ச பெர்னாண்டோ வர்த்தகம், ஒப்பந்தம் மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டம் என்பவற்றில் விசேடத்துவத்துடன் சட்டத்துறையில் 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட அரச சட்டத்தரணியாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணியகத்தின் ஆளுகை மதியுரைஞராகவும் பணியாற்றியுள்ளார். அவர் இலங்கை மத்திய வங்கி, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, சமாதானச் செயன்முறையை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் என்பவற்றின் சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

ஜெயவர்தனபுர பல்லைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ நிறுவகத்தின் ஒரு வருகைதரும் விரிவுரையாளராக உள்ளதுடன், ஐ.நா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகளுக்கான நிறுவனத்தால் நடாத்தப்படும் சர்வதேச உறவுகள் தொடர்பான கற்கை நெறியின் வருகைதரும் விரிவுரையாளராக அவர் பணியாற்றியுள்ளார். இலங்கை சட்டக் கல்லூரியின் உயர்தர சட்டக் கற்கைகளின் நிறுவனத்தின் ஒரு விரிவுரையாளராக அவர் இருந்துள்ளதுடன், இந்தியாவில் உட்கட்டமைப்பு ஒழுங்கமைப்பாளர்களின் தெற்காசியசம்மேளனத்தினால் நடாத்தப்பட்டநிகழ்ச்சித்திட்டங்கள், சர்வதேச அபிவிருத்திச் சட்ட நிறுவகம் மற்றும் இலண்டன் குயின்மேரி பல்கலைக்கழகத்திலும் அவர் விரிவுரையாளராக இருந்துள்ளார்.

சிங்கப்பூர் நனியங்க் (Nanyang) தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து வியாபார நிர்வாக முதுமானிப் பட்டத்தினையும், மஸூஸேட்ஸ் தொழில்நுட்ப நிறுவகத்தின் (MIT) ஸ்லோஅன் (Sloan) முகாமைத்துவ கல்லூரியில் நிறைவேற்று முகாமைத்துவ முதுமானி பட்டத்தையும் லண்டன் பல்கலைக்கழகத்தின் கிங்க்ஸ் கல்லூரியில் சட்ட முதுமானி பட்டத்தை பொருளாதார ஒழுங்கமைப்பு தொடர்பாக பெற்றுள்ள அதேவேளை சிங்கப்பூரின் நனியங்க் கூட்டாளர் விருதையும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய நாடுகளுக்கான செவனிங்க் புலமைப்பரிசிலையும் அவர் பெற்றுள்ளார். Junior Chamber International ஆல் நீதித்துறையின் இளையோருக்கு வழங்கப்படும் விருதை 2011ஆம் ஆண்டில் அவர் பெற்றுள்ளார்.

 

திருமதி. பிரசாந்தி, மகிந்தரத்ன (சிரேஷ்ட சட்ட ஆலோசகர்)

பிரசாந்தி மகிந்தரத்ன சட்டத்தின் எல்லா அம்சங்களிலும் ஒரு அனுபவம் வாய்ந்த வழக்குத் தொடுனராகவும் உள்ளார். 2002 இருந்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஐக்கிய நாடுகள் யுத்தக் குற்றங்கள் நியாய சபையில் வழக்குத் தொடுனராக சேவையாற்றிக் கொண்டு அவர் ஜுலை 2011 இல் Julius & Creasy சட்ட நிறுவனத்தில் ஒரு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். Sarajevo கைப்பற்றுகையில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் Dubrovnik தாக்குதல்கள் Croatiaவின் இனச் சுத்திகரிப்பு, Slobodan Milosevic Serbiaவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு, போன்ற ஹேக்கின் உயர்மட்ட யுத்தக் குற்ற வழக்குத் தொடுப்புக்களை அவர் மேற்கொண்டிருந்தார். ஹேக்கில் பணியேற்பதற்கு முன்னர்10 ஆண்டுகளாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் குற்றவியல் விசாரணைகள், சிவில் வர்த்தக மற்றும் தொழில் பிணக்கு வழக்குத் தொடுப்புக்களை நடத்தி அரச சட்டத்தரணியாக பிரசாந்தி செயற்பட்டுள்ளார்.

வடக்கில் யுத்த வலயத்தில் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகள் கிரிஷாந்தி குமாரசுவாமி மற்றும் ஏனையோரின் வன்புணர்வு மற்றும் கொலை விசாரணையிலும் எதிர் வழக்குத் தொடர்ந்தார்.

பிரசாந்தி 1990இல் இலங்கை சட்டக் கல்லூரியில் முதலாம் தர சிறப்புச் சித்தியுடன் வெளியேறியதுடன், பொது நிர்வாக சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம், என்பவற்றில் இரண்டு சட்ட முதுமானிபட்டங்களையும் கொண்டள்ளார். நியுயோர்க் சட்டக்கல்லூரியிலிருந்தும் இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்தும் சர்வதேச குற்றவியல் சட்டம் தொடர்பான பட்டத்தினையும் கொண்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து அவர் தடயவியல் மற்றும் விஞ்ஞான டிப்ளோமாவையும் கொண்டிருப்பதுடன் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் உயர்தர பரிந்துரைப்பு நுட்பங்களில் பயிற்சியையும் பெற்றுக்கொண்டுள்ளார். அவர் ஹெளசர் (Hauser) உலகளாவிய புலமைப்பரிசை பெற்றுள்ளதுடன் செவனிங்க் (Chevening) புலமைப்பரிசிலையும் பெற்றுள்ளார்.

செல்வி. மதுரி தமிழ்மாறன் (சட்ட ஆய்வாளர்)

மதுரி தமிழ்மாறன் ஒரு சட்டத்தரணியாவார். அவர் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் தொழில்சார் அனுபவமுடையவராகவும் உள்ளார். அவர் அமெரிக்க பல்கலைக்கழக வொஷிங்டன் சட்டக் கல்லூரியில் சர்வதேச சட்ட கற்கைநெறிகள் நிகழ்ச்சித்திட்டத்தில் சட்ட முதுமானியைப் பூர்த்தி செய்ததுடன், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பட்டதாரியும் ஆவார். இலங்கையில் அரசியலமைப்புச் செயன்முறைகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களும் யுத்தத்திற்குப் பிந்திய சூழ்நிலையில் அவர்களுக்கான போதிய வீட்டு வசதிக்கான உரிமையும் மற்றும் இலங்கையின் தனிப்பட்ட சட்டங்களின் கீழ் பெண்களுக்கான சொத்துரிமை என்பனவற்றின் மீதான ஆய்வுகளையும் அவர் எழுதியுள்ளார்.

மிக அண்மையில் அவர் மீளிணக்க பொறிமுறை மீதான கலந்தாலோசிப்பு செயலணியிலும் ஆய்வாளராகப் பணியாற்றினார். அவ் அறிக்கையானது இந்த வருடத்தின் ஜனவரியின் ஆரம்ப பகுதியில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 2010இல் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்ததிலிருந்து இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் மனித உரிமைகள் வழக்குத் தொடுப்பதில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Recent Decisions in Appeal (2024)

Cases filed in the Magistrate Court under Section 39 of the Right to Information Act No. 12 of 2016

Vacancies

No result...

Official Email Addresses of the RTI Commission to be used by Appellants & Public Authorities

Important Decisions in Appeal (2023)

Release of Information in Public Interest Appeals/Substantive Documents (SELECTED)

மேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்

 

uafi rti

Global Information Commissioners Meet in Tirana, Albania, June 2024; RTI Commissioners Kishali Pinto-Jayawardena and Jagath Liyana Arachchi at the sessions.

"Notable Developments in the Progress of the Right to Information Regime in Sri Lanka2023- First Quarter of 2024"

 

uafi rti

Global Information Commissioners Meet in Manila, June 2023 - RTI Commissioner Kishali Pinto-Jayawardena speaks at plenary sessions

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி விசாரணைகள்