பயனாளர் மதிப்பீடு: 4 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

நீதிபதி வல்கம (உறுப்பினர்)

justice walgamaநீதிபதி ரோஹினி வல்கம 11.02.1980 அன்று சட்டத்தரணியாக பதவிப்பிரயாணம் செய்து 03.11.1996 நீதித்துறையில் நீதிவானாக பங்கேற்றினார். அவர் நீதிவானாகவும், மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும், மேல்நீதிமன்ற நீதிபதியாகவும்;, வர்த்தக மேல்நீதிமன்ற மற்றும் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் செயற்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 20.09.2014 அன்று நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக 09.05.2017 நியமிக்கப்பட்டு, 30 ஆண்டுகளாக பணிபுரிந்து நீதித்துறையிலிருந்து 17.06.2017 அன்று ஓய்வு பெற்றார்.நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்திலும் அவர் விரிவுரையாற்றியுள்ளார்.

 

சிரேஷ்ட சட்டத்தரணி செல்வி கிஷாலி பின்ரோ ஜயவர்தன (உறுப்பினர்)

kpinto இலங்கையின் தகவல் அறியும் உரிமை சட்டவாக்க வரைபுக்குழுவில் 2003/2015இல் ஒரு உறுப்பினராக கிஷாலி பின்ரோ ஜயவர்தன சேவையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில், சிறப்புத் தேர்ச்சியுடன் பட்டம் பெற்றுக்கொண்டதுடன் 1997–2007 வரை பொது சட்ட துறைசார் விடயங்களில் பணியாற்றியதுடன்உறுதியான கருத்து வெளிப்படுத்துகை (Fernando v the State, No 1189/2003/, 2005) உட்பட ஐநா மனித உரிமைகள் குழு முன்பாக சார்புடையவராகத் தோன்றி பொதுச் சட்ட தொழிலாற்றி வந்ததுடன், 2016 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டவரைபை உருவாக்கியிருந்தார். 1998–2016 செப்ரெம்பர் வரைக்கும் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் சட்டத்துறை ஆலோசகராகவும், இருந்து அப்பத்திரிகையின் சட்டத்துறைசார் விடயங்களுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

பொதுநலவாய கற்கைகள் நிறுவகம் (ICwS), இலண்டன் பல்கலைக்கழகம், அபிவிருத்தி கற்கைகள் நிறுவகம் (IDS), ஐக்கிய இராச்சியம் செசெக்ஸ் (Sussex) பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம், சித்திரவதைக்கான ஆய்வு நிலையம் (RCT), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலக வங்கி, சட்ட இயல் வல்லுனர்களின் சர்வதேச ஆணைக்குழு (ICJ) என்பவற்றிலும் அவர் சிரேஷ்ட சட்ட ஆலோசகராவும் மதியுரைஞராகவும் இருந்துள்ளார்.

சல்பேர்க் ஆய்வாளராகவும் WISCOMP (புதுடெல்லி) நிறுவனத்தின் அமைதிக்கான புலமையாளாராகவும் இருந்ததுடன் 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மேலும் 2014ஆம் ஆண்டிற்கான DR.விஜயவர்தனவின் விருதிற்காக இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் அவர் ஏகமனதாக சிபாரிசு செய்யப்பட்டதுடன் தகவல் உரிமைக்காக குரல் கொடுப்போர் சார்பில்2016 இலும் அவர் இந்த விருதை ஏற்றுக்கொண்டார். Law & Society Trustஇன் பிரதிப் பணிப்பாளராகவும், LST ரிவ்யூ ஆய்விதழின் ஆசிரியராக 2004–2014 வரை இருந்துள்ளார். “சட்டம் ஒழுங்கு வீழ்ச்சி, (RCT, 2009, “நீதியை இன்னும் தேடிக் கொண்டு”(ICJ, 2010) மற்றும் “சர்ச்சரவுக்குள்ளான ஊடகம்”(Sage, 2015) என்பன இவர் எழுதியுள்ள நூல்களில் சிலவாகும்.

திரு. மகிந்த கம்மம்பில (தலைவர்)

gmmanpila மகிந்த கம்மம்பிலஅவர்கள் BA(Hons), M.Soc.Sc.(Birmingham), SLAS(Rtd.) ஆகிய பட்டங்களைக் கொண்டுள்ளார். அவர் அரச கொள்கை, அபிவிருத்தி நிர்வாகம், சமூக அபிவிருத்தி, தொழிற்கற்கைகள், உற்பத்தி திறன் மேம்பாடுமற்றும் நிறுவன இயலுமை விருத்தி ஆகிய விடயங்களில் அனுபவமும் திறமையும் கொண்டுள்ள அதேவேளை அவ்விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளில் முகாமைத்துவ ஆலோசகராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாறியுள்ளார்.

அவரது 35 வருட அரச சேவையின் போது அவர் பல நிர்வாக மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளிலும் சேவையாற்றியுள்ளதுடன் இலங்கை நிர்வாக அபிவிருத்தி இலங்கை நிறுவனத்தின் மேலதிகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளை வகித்ததுடன் இளைப்பாறிச்செல்லும் போது தொழில் அமைச்சின் செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். தேசிய உற்பத்தி திறன் செயலகம், தொழிலமைச்சிலுள்ள தொழில் வலையமைப்பு (JobsNet) உள்ளிட்ட மேலும் பல பொதுத்துறை நிறுவன விருத்திகளுக்கு அவர் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) உட்பட சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐடுழு) வருடாந்த மகாநாடுகள், ஆசிய உற்பத்தி திறன் நிறுவனம் (ILO) போன்ற சர்வதேச சபைகளில் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்றபின்னர் CWEயின் தலைவராகவும், கல்வியமைச்சின் வெளிநாட்டு நிதியீட்டத்திலான செயற்திட்டங்களில் தேசிய ஆலோசகராகவும், உலக வங்கியால் நிதியீட்டப்பட்ட கல்வித்துறை அபிவிருத்திக் கட்டமைப்பு மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களில் கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவ ஆலோசகராகவும் (ESDFP) அவர் பணியாற்றியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் திணைக்களத்தில் அதிகாரப்பகிர்வு மற்றும் உள்ளுராட்சி கற்கைகள் மீதான பட்டப்பின் படிப்பு கற்கைநெறியின் இணை கற்கைநெறி ஒருங்கிணைப்பாளராகவும் வருகை தரும் விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

 

கலாநிதி.செல்வி திருச்சந்திரன் (உறுப்பினர்)

selvy கலாநிதி. செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் (WERC)இன் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பானரும் நம்பிக்கை பெறுப்பாளரும் ஆவார். சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் சபை உறுப்பினராகவும்(SSA) மற்றும் நூலக சங்கத்தின் சபை உறுப்பினராகவும் சமூக அபிவிருத்தி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் சபை உறுப்பினராகவும் உள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகச் சபையில் அவர் சேவையாற்றியதுடன் ஐநா பெண்கள் சிவில் சமூக வதிவிடக் குழுவிலும் (2015-2017)பிரதிநிதித்துவம் செய்கிறார்.

அவர் பேராதெனிய பல்கலைகழகத்தில் கலைமானி பட்டம் பெற்றுள்ளதுடன் நெதர்லாந்தின் சமூக கற்கைகள் நிறுவனத்தில் பெண்கள் கற்கைகள் தொடர்பாக முதுமானி பட்டமும் பெற்றுள்ளார். மேலும் அம்ஸ்டெர்டமின் விரிஜே பல்கலைக்கழகத்தில் கலாசார மானிடவியல் தொடர்பில் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றுள்ள கலாநிதி செல்வி அவர்கள் பால்நிலை சமத்துவமும் ஒருமைப்பாடும், பெண்ணியம் தொடர்பான ஆய்வுகள், பெண்கள் வலுவூட்டல், பெண்களும் மதமும், அரசியலில் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான விடயங்களில் பங்களிப்பு செய்துள்ளார்.

விவாதங்களின் கூட்டு: உரையாடலும் கலந்துரையாடலும் (WERC, 2013), சமயம் எழுதுதல்: பெண்களின் இடம் (SSA, 2012), இலங்கையில் பெண்கள் இயக்கம்: வரலாறு, போக்குகள் (WERC, 2012), பெண் பேச்சு மாற்றுகைகள் : தமிழ் பெண்களின் தாலாட்டும் ஒப்பாரிக்குமுள்ளான ஒரு ஆராய்வு (விக்காஸ் பிரசுர இல்லம், புதுடெல்லி- 2001), மற்றும் யுத்தத்தில் ஏனைய பாதிக்கப்பட்டவர்கள்: கிழக்கு இலங்கையில் பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்டோரின் அதிகரிப்பு (விக்காஸ் பிரசுர இல்லம், புதுடெல்லி- 1999) உள்ளிட்ட ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். அவர் பல கட்டுரை தொகுதிகளைத் தொகுத்துள்ளதுடன் அதில் காலனித்துவத்தின் பின்னரான இலங்கை பெண்கள் தொடர்பான கட்டுரைகள் (விஜித்த யாப்பா புத்தகசாலை-2011) அண்மையில் வெளிவந்ததாகும்.

சுய வெளிப்பாட்டு அறிக்கைகள் மற்றும் வழிக்காட்டுதல்கள்

Recent Decisions in Appeal (2023)

Cases filed in the Magistrate Court under Section 39 of the Right to Information Act No. 12 of 2016

Release of Information in Public Interest Appeals/Substantive Documents (SELECTED), 2023

Vacancies

மேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்

 

uafi rti

Global Information Commissioners Meet in Manila, June 2023 - RTI Commissioner Kishali Pinto-Jayawardena speaks at plenary sessions

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி விசாரணைகள்